உடல் பிடிப்பு நிலையங்களில் பணியாற்றிய 15 தாய்லாந்து யுவதிகள் கைது

Tuesday, 24 January 2023 - 15:10

%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+15+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து, கொழும்பில் இயங்கிய ஆறு உடல் பிடிப்பு நிலையங்களில் பணியாற்றிய 15 தாய்லாந்து யுவதிகள் கைதாகினர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைதாகினர்.

அவர்களில் ஐந்து பேர் கொள்ளுப்பிட்டி மற்றும் கல்கிசை பகுதிகளில் இயங்கி வந்த உடல் பிடிப்பு நிலையங்களில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் நான்கு பேர் வீசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருந்தவர்களாவர்.

ஏனைய தாய்லாந்து யுவதிகள், கொழும்பு, ஹெவ்லொக் வீதி, தும்முல்லை சந்தி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த உடல் பிடிப்பு நிலையங்களில் பணியாற்றிவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 10 பேரும் சுற்றுலா வீசா மூலம் நாட்டை வந்தடைந்தவர்களாவர்.

கைதான தாய்லாந்து யுவதிகள், நாடு கடத்தப்படும் வரை வெலிசர முகாமில் தடுத்து வைக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.