பிங்கிரியவில் வெடிபொருட்கள் அடங்கிய பாரவூர்தி ஏதேனும் குற்றச் செயல்களுக்காக கொண்டு செல்லப்பட்டதா?

Tuesday, 24 January 2023 - 20:52

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%3F
குருநாகல் - பிங்கிரிய – விலத்தவ பகுதியில் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்ட வெடிப்பொருட்கள் அடங்கிய பாரவூர்தி, ஏதேனும் குற்றச் செயல்களுக்காக கொண்டு செல்லப்பட்டதா? என்ற சந்தேகம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு தொகை வெடி பொருட்களுடன் பயணித்த பாரவூர்தி ஒன்று நேற்றிரவு குருநாகல் - பிங்கிரிய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் மன்னாரைச் சேர்ந்த இருவர் கைதாகினர்.

அவர்கள் 33 மற்றும் 44 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

விலத்தவ பகுதியில் குறித்த பாரவூர்தி நேற்றிரவு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பாரவூர்தியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

வெடி மருந்துகள் அடங்கிய 89 குழாய்கள், 80 அடி நீளமான 21 நூல்கள் மற்றும் 100 டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை இதன்போது கைப்பற்றப்பட்டன.