வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும்

Tuesday, 24 January 2023 - 20:38

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+15+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
உள்ளுராட்சிமன்ற தேர்தல்களின் போது, வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது, தேர்தல்கள் செலவினம் தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபையிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கையெழுத்தை போலியான வகையில் இட்டு வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

அதேநேரம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்கப்படாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.