நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்

Wednesday, 25 January 2023 - 7:09

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
ஜசின்டா ஆர்டெர்ன் பதவி விலகியதை அடுத்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார்.

நியூசிலாந்தின் தற்போதைய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவராக அவர் பதவியேற்றமையை தொடர்ந்து இந்த பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் அவர் காவல்துறை மற்றும் காவல்துறை அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

முன்னாள் பிரதமரான ஜசின்டா ஆர்டெர்ன் தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் சிண்டி கிரோவிடம் கையளித்தார்.

இதன்படி, நியூசிலாந்தின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார்.

அவருக்கு தமது பாராட்டுக்களை முன்னாள் பிரதமர் ஜசின்டா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.