முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம் பௌசியை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் நோக்கில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முஜிபுர் ரஹ்மான் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அரசியலமைப்பின் 99வது உறுப்புரையின் 13 ஆம் உப பிரிவின் கீழ், குறித்த வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளதாக அந்த விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.