ஒஸ்கார் இறுதி பரிந்துரை பட்டியலில் "நாட்டு... நாட்டு..." பாடல்!

Wednesday, 25 January 2023 - 10:33

%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%22%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81...+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81...%22+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%21
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் ஒஸ்கார் விருதுகளுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் திகதி 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வெளியானது.

இதெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர் இப்படத்தில் பொலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர்.

இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தில் கீரவானியின் இசையில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் சிறந்த அசல் பாடல் (Best Original song) பிரிவில் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், சிறந்த  பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் மேலும் நான்கு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அண்மையில், "நாட்டு... நாட்டு..." பாடலுக்காக கோல்டன் க்ளோப் விருதும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.