நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் உட்பட்ட பொதுமக்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் குறிப்படுகின்றனர்.
எனினும், வடமத்திய நைஜீரியாவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் தொடர்நது வந்த நிலையிலேயே குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.