வாரிசு - துணிவு படங்களின் இதுவரையான வசூல் விபரம்!

Friday, 27 January 2023 - 16:17

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81+-+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் சுமார் 9 வருடங்களின் பின்னர் ஒரே நேரத்தில் கடந்த 11ஆம் திகதி வெளியானது.

விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், இவ்விரு திரைப்படங்களின் இதுவரையான வசூல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாரிசு திரைப்படம் இதுவரையில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 280 கோடி ரூபாவை வசூலித்துள்ளதுடன், தமிழகத்தில் மாத்திரம் 124 கோடி ரூபாவை வசூலித்துள்ளது.

துணிவு திரைப்படம் இதுவரையில் உலகம் முழுவதும் 210 கோடி ரூபாவை வசூலித்துள்ளதுடன், தமிழகத்தில் மாத்திரம் 107 கோடி ரூபாவை வசூலித்துள்ளது.

இந்தநிலையில், மூன்றாவது வாரத்திலும் இவ்விரு படங்களும், வெற்றிகரமாக திரையரங்களுகளில் திரையிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.