அனுமதியின்றி ரஜினியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை!

Sunday, 29 January 2023 - 15:33

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%21
நடிகர் ரஜினி காந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி காந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்தப்பட்டால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினி காந்த் சார்பில் அவரது சட்டத்தரணி இளம் பாரதி அறிவித்துள்ளார்.

சில நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும், பிரபலமடைவதற்காகவும் ரஜினியின் பெயர் , புகைப்படம் , குரல் என்பவற்றை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ரஜினி சார்பில் சட்டத்தரணி இளம் பாரதி இந்த பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.