பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்ததில் 41 பேர் பலி: பாகிஸ்தானில் சம்பவம்

Sunday, 29 January 2023 - 16:32

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++41+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%3A+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று (29) பேருந்து ஒன்று பாலமொன்றில் மோதி பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தனர்.

சிதைவுகளிலிருந்து 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அவற்றில் சில அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளன என்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி இஸ்ரார் உம்ரானி தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தானின் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் சுமார் 48 பேருடன் சென்ற குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.