சாவகச்சேரி வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

Sunday, 29 January 2023 - 23:02

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாதையை கடக்க முற்பட்ட உந்துருளியுடன் பிறிதொரு உந்துருளி மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் சாவகச்சேரி - சங்கத்தானையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.