இலங்கையில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய நிலையங்களை நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பில் அமைந்துள்ள பிரதான கடவுச்சீட்டு அலுவலகத்துடன் வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்கள் கடவுச்சீட்டுகளை விநியோகித்து வருகின்றன.
இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சிப் கொண்ட “இ-பாஸ்போர்ட்டை” (இலத்திரனியல் கடவுச்சீட்டு) விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.