2024 ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்களை பங்கேற்க அனுமதிப்பது ஒருவகையில் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும் என யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கு அறிவித்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் நடத்தவுள்ளது. இப்போட்டிகள் 2024 ஜூலை 26 ஆம் திகதி பாரிஸில் தொடங்கவுள்ளது.
முன்னதாக ரஷ்ய மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் குழாம்அறிவித்தது.
எவ்வாறாயினும், அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்போம் என யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.