இன்றும் 140 நிமிடங்களுக்கு மின்வெட்டு - நாளை குறையலாம்

Sunday, 05 February 2023 - 13:52

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+140+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+-+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
இன்று (5) இரண்டு மணிநேரம் இருபது நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்திக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும், அனல் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறையாலும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அறிக்கையொன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாளை இரண்டு மணித்தியாலங்களுக்கு மாத்திரம் மின்வெட்டை மட்டுப்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், நீர் மின் நிலையங்களைச் சூழ பதிவாகும் மழை வீழ்ச்சியின் பிரகாரம் மின்சார முகாமைத்துவ நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படலாம் என மின்சார சபை அறிவித்துள்ளது.