ரஜினியை இயக்கும் ஜெய்பீம் இயக்குநர் - தலைவர் 170 அறிவிப்பு வெளியானது

Thursday, 02 March 2023 - 12:14

%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+170+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்குவதுடன், அனிருத் பாடல்களுக்கு இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு, தலைவர் 170 என்ற பெயரோடு, ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.