ஹொலிவூட் நடிகருக்கு பிடித்த இலங்கையின் படப்பிடிப்பு தளம்!

Monday, 06 March 2023 - 16:25

%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%21
பிரபல ஹொலிவூட் நடிகரான ரயன் ரெனால்ட்ஸ் இலங்கையின் ஹிக்கடுவ பகுதியே படப்பிடிப்பு செய்வதற்கு தமக்கு பிடித்தமான இடம் என தெரிவித்துள்ளார்.

இன்று லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செவ்வியில் ரயன் ரெனால்ட்ஸிடம் அவரது முதல் திரைப்படமான "Ordinary Magic 1993" பற்றி வினவப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளன என்றும், இலங்கையின் ஹிக்கடுவ பகுதி தனக்கு படப்பிடிப்பு செய்ய மிகவும் விருப்பமான இடம் எனவும் ரயன் ரெனால்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.