படப்பிடிப்பு தளத்தில் விபத்து: அமிதாப் பச்சனுக்கு காயம்!

Monday, 06 March 2023 - 23:22

%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21+
இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதாக அறிவித்துள்ளார்.

80 வயதான பச்சன், தெற்கு நகரமான ஹைதராபாத்தில் தனது அடுத்த திரைப்படமான புராஜெக்ட் கே திரைப்படத்திற்கான சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், மும்பையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும், அவர் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது திரைப்பட்ட வாழ்க்கையில் அமிதாப் பச்சன் சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்.