8 ஆண்டுகளுக்குப் பிறகு 'லால் சலாம்' படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளார்.
இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதுடன் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் இணைந்துகொண்டனர்.
லால் சலாம்' கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட படம் எனக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் CCL தொடரில் பங்கேற்பது படத்திற்கான பயிற்சியாக அமையவுள்ளது.
ரஜினிகாந்த் 'லால் சலாம்' படத்தில் ஒரு கௌரவ கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பை முடித்தவுடன் இந்தப்படத்தில் இணைவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் ஜீவிதா ராஜசேகர், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் அவர் இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.