நடிகர் பவன் சிங் மீது கல்வீச்சு தாக்குதல்!

Wednesday, 08 March 2023 - 15:39

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
நடிகர் பவன் சிங் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போஜ்புரி மொழியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் பவன் சிங்.

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பயணித்து வருகிறார்.

இந்தநிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்லியா என்ற மாவட்டத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் பவன் சிங்.

அப்போது, மேடையில் பாடிக்கொண்டிருக்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பாடலை பாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்தப் பாடலை பவன் சிங் பாட மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அவர்கள் பவன் சிங் மீது சிறிய கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.

இதனால் அவர் மேடையில் இருந்தபடியே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பரபரப்பு நிலவியதால் சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

பின்பு காவல்துறையினர் தடியடி நடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.