சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க 9 முக்கிய சந்தைகளில் பிரசாரத்துக்கு திட்டம்

Thursday, 09 March 2023 - 14:04

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக ஒன்பது முக்கிய சந்தைகளில் சுற்றுலா ஊக்குவிப்பு பிரசாரங்களை நடத்துவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு இலங்கைக்கு 1.55 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இலக்கிற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கு பெரிய திட்டங்கள் உள்ள போதிலும் உலகளாவிய பிரசார நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட ஒன்பது சந்தைகளில் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, இந்தியா மற்றும் பிரித்தானியா என்பன முன்னிலையில் உள்ளன.