லியோ படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்!

Saturday, 11 March 2023 - 18:15

%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%21
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கின்றார்.

அத்துடன், இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பொலிவூட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.

இது தொடர்பான காணொளியை படக்குழு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த காணொளியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.