'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்': இந்திய ஆவண குறும்படத்துக்கு முதல் ஒஸ்கார் விருது!

Monday, 13 March 2023 - 13:52

%27%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%27%3A+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%21

ஒஸ்கார் விருதை வென்ற முதல் இந்திய ஆவணப்படம் என்ற சாதனையை எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் உருவாக்கியுள்ளது.

இது 95 ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த ஆவணக் குறும்படமாக விருதினை வென்றது.

Oscar

பொம்மன் மற்றும் பெல்லி என்ற பழங்குடி தம்பதியினர் அனாதரவான குட்டி யானையை பராமரிக்கும் கதையை இந்த ஆவணப்படம் கூறுகிறது.

விலங்குக்கும் அதன் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான விலைமதிப்பற்ற பிணைப்பை படம் ஆராய்கிறது.

இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குணீத் மோங்கா ஆகியோர் சமூகவலைத்தளங்களில் தமது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

Elephant whisperers Oscar win

இந்திய தயாரிப்புக்கான முதல் ஒஸ்கார் விருது இன்று வரலாற்று சிறப்புமிக்கது. 2 பெண்களுடன் இந்தியாவின் பெருமை என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரிவில் ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆகும்.

கடந்த காலத்தில் சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட படங்கள் - 1969 இல் The House That Ananda Built மற்றும் 1979 இல் An encounter with faces என்பன விருது பெறத் தவறின.