விடுதலை படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வைகளை கடந்தது!

Monday, 13 March 2023 - 23:17

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+25+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%21
வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'விடுதலை'.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

அண்மையில், இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருந்தது.

இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வந்தனர்.

இந்தநிலையில், விடுதலை திரைப்படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.