டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக டேவிட் வோர்னர் நியமனம்

Thursday, 16 March 2023 - 13:36

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியின் தலைவராக செயற்பட்ட ரிசப் பண்ட், கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற மகிழூர்ந்து விபத்தின் போது காயமடைந்தார்.

இந்தநிலையில், அந்த இடத்திற்கு டேவிட் வோர்னரை நியமிக்க அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரிக்கி பொண்டிங் மற்றும் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

அணியின் உப தலைவராக இந்திய அணியின் சகலத்துறை வீரர் அக்சர் பட்டேல் தொடர்ந்தும் செயற்படுவார் என டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.