பாகிஸ்தானுக்கு மீள்நிதியளிப்பு கடன்

Friday, 17 March 2023 - 10:00

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
பாகிஸ்தானுக்கு மற்றுமொரு மீள்நிதியளிப்பு கடனை வழங்க சீன வங்கி ஒன்று உறுதியளித்துள்ளது.

எதிர்வரும் சில நாட்களுக்கு, பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டொலர் கடன் கிடைக்கப்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, சீனாவினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்தொகை, 1.7 பில்லியன் டொலராக அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன், பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர், நட்புறவு நன்கொடை நாடுகள் மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து 100 சதவீத உறுதிப்படுத்தலைப் பெறுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

எதிர்வரும் ஜுன் மாதம் காலாவதியாகவிருக்கும் திட்டக் காலத்தின் போது, வணிகக் கடன்களின் மீள்நிதியளிப்பு மற்றும் சீனாவில் இருந்து வைப்புக்களை திருப்பிச் செலுத்துவதை பாகிஸ்தான் பாதுகாக்க வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் எழுதப்படாத நிபந்தனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.