உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி!

Saturday, 18 March 2023 - 12:10

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 1.73 டொலரால் குறைவடைந்து, 72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 டொலரால் குறைவடைந்து, 66.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை 2.3 அமெரிக்க டொலராக உள்ளது.

வங்கித் துறைகளின் வீழ்ச்சி தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.