உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு நிதி வழங்கப்படாமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக மீண்டும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நிதியை வழங்குமாறு உயர்நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் நிதியமைச்சின் செயலாளர் அதனை செயற்படுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.
பாதீட்டில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை அறிவித்தவுடன் சகல அரச நிறுவனங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.