பெங்களூர் அணியில் இணைந்த நியூசிலாந்து அணி வீரர்!

Saturday, 18 March 2023 - 18:26

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%21++
16ஆவது ஐபிஎல் தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடருக்காக பல்வேறு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இருந்து வில் ஜொக்சன் விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மைக்கெல் பிரேஸ்வெல் தெரிவாகியுள்ளார்.

பிரேஸ்வெல் அடிப்படை விலையான 1 கோடி இந்திய ரூபாவுக்கு பெங்களூர் அணியில் இணைகிறார்.