உள்நாட்டு உற்பத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் - செந்தில் தொண்டமான்

Saturday, 18 March 2023 - 19:34

%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+
சர்வதேச நாணய நிதியம் மாத்திரமின்றி உள்நாட்டு உற்பத்திகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுமாயின் விரைவாக பொருளாதாரத்தில் மீட்சியை அடைய முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று காலை எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுப்பதாகவும் அதன் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.