பெங்களூரில் தவறான பயணிகள் முனையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட இலங்கையர்கள்!

Saturday, 18 March 2023 - 22:35

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்த பயணிகள் சிலரை தவறுதலாக உள்நாட்டு பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யூ எல் 173 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக பயணித்த 30 பயணிகள் இவ்வாறான நிலைமை எதிர்நோக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர், அவர்கள் சர்வதேச பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்.

ஆனால், அவர்கள் மாறாக உள்நாட்டு பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சிறிது நேரத்தின் பின்னர், குறித்த தவறு தெரியவந்ததுள்ளது.

பின்னர், பயணிகள் சர்வதேச பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்டப்டுள்ளனர்.

இந்தநிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்கவும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பெங்களுர் விமானநிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.