மைக்கெல் ப்ரேஸ்வெல்லுக்கு பதிலாக ரச்சின் ரவீந்ரா!

Saturday, 18 March 2023 - 23:05

%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%21
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்தில் குழாமில் மைக்கெல் ப்ரேஸ்வெல்லுக்கு பதிலாக ரச்சின் ரவீந்ரா இணைக்கப்பட்டுள்ளார்.

2023 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக மைக்கெல் ப்ரேஸ்வெல் நியூசிலாந்து குழாமில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இந்தநிலையில் எதிர்வரும் புதன்கிழமை ரச்சின் ரவீந்ரா நியூசிலாந்து அணியுடன் இணையவுள்ளார்.

இதுவரையில் நியூசிலாந்து அணிக்காக 6 இருபத்துக்கு 20 கிரிக்கட் தொடரில் விளையாடியுள்ள அவர், ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.