303 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி!

Sunday, 19 March 2023 - 11:37

303+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டஙகளை பெற்றுள்ளது.

வெலிங்டனில் இடம்பெற்றுவரும் சுற்றுலா இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 580 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுறுத்தியது.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த நிலையில், ஃப்ளோஒன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களுக்கு, 113 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அதன்படி, நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை விட 303 ஓட்டங்கள் இலங்கை அணி பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில், குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களுடனும், ஏஞ்சலோ மெத்யூஸ் ஒரு ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.