பொன்னியின் செல்வன் - 2 படத்தின் அப்டேட் வெளியானது!

Sunday, 19 March 2023 - 14:20

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+-+2+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற 'அக நக' என்ற பாடல் நாளை மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளனர்.

இதேவேளை, பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் 6 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது

பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை எதிர்வரும் 29ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.