இம்முறை சென்னை வெல்லும் என நான் நினைக்கவில்லை - முன்னாள் இந்திய அணி வீரர்!

Sunday, 19 March 2023 - 17:16

%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88++-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%21
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சென்னை அணி வெல்லாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டியில் நடப்பு சம்பியனான குஜராத் அணியும், முன்னாள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிண்ணத்தை சென்னை அணி வெல்லும் என நான் நினைக்கவில்லை.

இந்தத் தொடரில் என்னுடைய ஆதரவு ராஜஸ்தான் அணிக்கு தான்.

ஆனால், சம்பியன் பட்டத்தை இதுவரை கைப்பற்றாத அணி இந்தத் தொடரை வென்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிண்ணத்தை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் கைப்பற்றினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்துள்ளார்.

ஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் கைப்பற்றினால் அது நன்றாக இருக்கும் என ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார்.