பலவீனமான ஆட்டத்தால் அவுஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா!

Sunday, 19 March 2023 - 17:53

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 26 ஓவர்கள் நிறைவில் ககல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 31 ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இந்திய அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டாக் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், சீன் அபோட் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், 118 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 11 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக மிட்செல் மார்ச் 66 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதற்கமைய, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 - 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.