ரஜினியுடன் புகைப்படமெடுத்த கிரிக்கெட் பிரபலங்கள்!

Sunday, 19 March 2023 - 18:11

%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியை காண, நடிகர் ரஜினிகாந்த் நேற்றுமுன்தினம் (17) மும்பை சென்றிருந்தார்.

மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் காலேவின் அழைப்பை ஏற்று, ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் கிரிக்கெட் போட்டியை நேரடியாக கண்டுகழித்தார்.

இந்த நிகழ்வின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது, மும்பையில் ரஜினிகாந்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர் மற்றும் சில ஊழியர்களின் புகைப்படங்களால் இணையம் நிரம்பியுள்ளது.

சமூக ஊடகங்களில், குல்தீப் யாதவ் சூப்பர் ஸ்டாருடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அதற்கு தமிழில் “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தலைவர்” என்று தலைப்பிட்டுள்ளார்.

இதேபோல், வொஷிங்டன் சுந்தர் இன்ஸ்டாகிராமில் ரஜினிகாந்தினுடன் தான் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், ரஜினியில் பிரபல வசனமான "இது எப்டி இருக்கு" என்று தலைப்பிட்டார்.