நியூஸிலாந்து அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி!

Monday, 20 March 2023 - 11:26

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
நியூஸிலாந்து - வெலிங்டனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூலிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 580 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த நிலையில், ஃப்ளோஒன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, நேற்று மூன்றாம் நாள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்தநிலையில், 303 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த நிலையில், 4 ஆவது நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்து இழந்தை அணி, 358 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில், சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இன்னிங்ஸில், இலங்கை அணியின் சார்பில் அதிகபடியாக, 98 ஓட்டங்களை பெற்ற தனஞ்சய டி சில்வா 2 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் டிம் சௌதி மற்றும் மைக்கல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை, நியூஸிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில், கேன் வில்லியம்ஸன் (215 ஓட்டங்கள்) மற்றும் ஹென்றி நிக்கொல்ஸ் (ஆட்டமிழப்பின்றி 200 ஓட்டங்கள்) ஆகியோர் இரட்டை சதங்களை பெற்றிருந்தனர்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் வென்ற நியூஸிலாந்து அணி 2- 0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் வீரராக ஹென்றி நிக்கொல்ஸும், தொடரின் வீரராக கேன் வில்லியம்ஸனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.