வீட்டிலிருந்த 60 பவுண் நகைகள் திருட்டுபோயுள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முறைப்பாடு

Monday, 20 March 2023 - 15:22

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+60+%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 60 பவுண் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல்போயுள்ள இந்த பொருட்கள் 2019 ஆம் ஆண்டு தனது சகோதரி சௌந்தர்யாவின் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டவை எனவும், அவற்றை ஐஸ்வர்யா ஒரு பெட்டகத்தில் வைத்திருந்தார் என்று அது வீட்டில் பணிபுரியும் பணியாட்கள் சிலருக்குத் தெரியும் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நகை திருடு போனதாக புகார் அளித்தார்.

2021 ஆம் ஆண்டில் பெட்டகம் மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டது. 2021 ஆகஸ்ட் 21 ஆம் திகதியன்று, சிஐடி நகரில் உள்ள அவரது முன்னாள் கணவர் தனுஷின் வீட்டுக்கு குறித்த பெட்டகம் வீட்டுப் பாவனை பொருட்களுடன் எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் செப்டம்பரில் அதனை சென்னையில் உள்ள செயின்ட் மேரிஸ் வீதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு ஐஸ்வர்யாவால் மாற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 2022 ஏப்ரலில், அந்த பெட்டகம் அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில் அதன் திறப்பு செயின்ட் மேரிஸ் வீதியில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்தது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 10 ஆம் திகதியன்று அன்று ஐஸ்வர்யா பெட்டகத்தை திறந்தபோது, திருமணமான 18 ஆண்டுகளில் குவிந்திருந்த சில நகைகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனது முறைப்பாட்டில், தனது பணிப்பெண்கள் இருவர் மற்றும் அவரது சாரதி ஆகியோர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், செயின்ட் மேரிஸ் வீதியிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தான் வெளியூர் சென்றிருந்தபோதும் அடிக்கடி அவர் வந்து செல்வதாகவும் கூறியுள்ளார்.