நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்!

Monday, 20 March 2023 - 17:10

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%21
பிரபல பொலிவூட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரின் உதவியாளருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, நடிகர் சல்மான் கான் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நடிகர் சல்மான் கானின் வீட்டில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொலை மிரட்டல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.