அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து - ஐந்து சிறுவர்கள் பலி

Monday, 20 March 2023 - 17:27

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
அமெரிக்காவின் நிவ்யோர்க் மாகாணத்தின் வெஸ்ட்செஸ்ட்டர் பகுதியில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

8 முதல் 17 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

16 வயதுடைய சிறுவன் ஒருவர் செலுத்திய மகிழூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டு தீப்ற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்துள்ள 09 வயதுடைய சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.