மூன்றாவது நாளாகவும் தொடரும் அம்ரிட்பால் சிங்கை தேடும் பணிகள்!

Monday, 20 March 2023 - 20:06

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
பஞ்சாபில், காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரிட்பால் சிங்கை தேடும் பணிகள் மூன்றாவது நாளாக தொடர்வதாக உயர்மட்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேடும் பணியில் நூற்றுக்கணக்கான விசேட படையணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரை, அவரது ஆதரவாளர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்தநிலையில் மத்திய அரசாங்கம் இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அம்ரிட்பால் சிங்கிற்கு எதிரான விசாரணைகள் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, அவரின் நெருங்கிய நால்வர் உட்பட 112 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற அவர் போதைவஸ்து பெரும் வர்த்தகர் ராவெல் சிங் என்பவரின் மேசிடிஸ் மகிழுந்து மூலம் தப்பி சென்றுள்ளார்.

பின்னர் அவர் மகிழுந்தை கைவிட்டு உந்துருளி ஒன்றில் தமது பயணத்தை தொடர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் அம்ரிட்பால் சிங்கிற்கு பாக்கிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. புலனாய்வு தரப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், போதை வஸ்து வர்த்தகத்திற்கு அவர்கள் உதவிவருவதாகவும் தெரியவந்துள்ளது.