ஐரோப்பிய வங்கியின் பங்குகள் பாரிய வீழ்ச்சி!

Monday, 20 March 2023 - 20:10

%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
ஐரோப்பிய வங்கியின் பங்குகள் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளன.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கிரெடிட் சுயிஸ்சி வங்கியினை, அதன் முக்கிய போட்டி வங்கியான யூ.பி.எஸ். வாங்கியதனை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உலக வர்த்தக சமூகம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் பங்குச் சந்தை மூடுவதற்கு முன்னர் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் மூலம் இந்த பரிவர்தனை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக 13 சத வீத வீழ்ச்சி உடனடியாக ஏற்பட்டது.

இதன் காரணமாக ஐரோப்பாவின் முக்கிய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது தவிர, ஆசிய பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஹொங்கொங்கின் ஹங் செங்கின் பங்கு, 3 சத வீதத்தாலும், ஜப்பானின் நிக்கி 1 சத வீதத்தாலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த அசாதாரண நிலை மூலம் கிரெடிட் சுயிஸ்சி, வங்கி துறையில் ஏற்பட்ட நம்பிக்கை நெருக்கடியில் மிக முக்கியமான தோல்வியாகும்.

இதன் காரணமாக அமெரிக்காவில் சிலிக்கான் வலி வங்கியின் நிதி நிலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியாக பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஏற்படுமா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் எந்தவிதமான கருத்துக்களையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.