என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? - ரசிகரிடம் கேட்டார் ரோஹித்

Monday, 20 March 2023 - 22:46

%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%3F+-+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானம் ஊடாக ரோஹித் சர்மா பயணமானார்.

இந்தவேளையில் அவரை வரவேற்க ரசிகர்கள் பலர் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

இதன்போது ரசிகர்கள் பலர் ரோஹித்துக்கு ரோஜா பூக்களை கொடுத்தனர்.

அதில் ஒரு பூவை எடுத்து வந்த ரோஹித் சர்மா அங்கு நின்றுக்கொண்டிருந்த ரசிகர் ஒருவரிடம் கொடுத்து என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டார்.

அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.