இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் குறைந்தது!

Tuesday, 21 March 2023 - 13:28

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%21
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வலுவடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீதம் மூலம் அறியமுடிகிறது.

அதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 84 சதமாகவும், விற்பனை பெறுமதி 334 ரூபா 93 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்த போதிலும், கடந்த வாரம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 331 ரூபா 71 சதமாகவும், விற்பனை பெறுமதி 349 ரூபா 87 சதமாகவும் காணப்பட்டது.


No description available.