அதிக விலைக்கு முட்டை விற்பனை - 12 இலட்சம் ரூபாய் அபராதம்

Wednesday, 22 March 2023 - 7:36

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+-+12+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
கட்டுப்பாட்டு விலையக் கருத்திற்கொள்ளாமல், முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு, 12 இலட்சம் ரூபாய் அபராதத்தை விதிக்க கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

42 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள வெள்ளை முட்டையை, 52 ரூபாவுக்கு நான்கு வர்த்தகள் விற்பனை செய்துள்ளனர்.

பொரலஸ்கமுவ, போகுந்தர மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களே அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்துள்ளனர்.

அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.