உக்ரைனுக்கு கிடைக்கவுள்ள பாரிய நிதியுதவி பொதி!

Wednesday, 22 March 2023 - 14:08

%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%21
உக்ரைனுக்கு 15.6 பில்லலியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கான பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நாட்டுக்கான முதல் தவணை நிதி எதிர்வரும் வாரங்களில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் பின்னர் உக்ரைனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய நிதியுதவிப் பொதி இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

'விதிவிலக்காக அதிக நிச்சயமற்ற தன்மையை' எதிர்கொள்ளும் நாடுகளுக்கு கடன்களை அனுமதிக்கும் விதியை சர்வதேச நாணய நிதியம் அண்மையில் மாற்றியது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மூலதனப் பங்குகளின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது.

மேலும் வறுமை நிலைகள் உயர்ந்துள்ளதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரி கவின் கிரே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பொருளாதாரம் இந்த ஆண்டு சிறிது சுருக்கம் அல்லது வளர்ச்சியை பதிவு செய்யும் என சர்வதேச நாணய நிதிய எதிர்பார்க்கிறது.