இரு ஓட்டங்களுக்காக காத்திருக்கும் விராட் மற்றும் ரோஹிட்

Wednesday, 22 March 2023 - 15:09

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர்களான ரோஹிட் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைப்பாட்டமாக இரண்டு ஓட்டங்களைப் பெற்றால் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 5000 ஓட்டங்களைப் பெற்ற ஜோடி என்ற சாதனையை படைக்க உள்ளனர்.

குறித்த இருவரும் இதுவரையில் 85 போட்டிகளில் 4 ஆயிரத்து 998 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர்.

அதில் 18 சதங்களும் 15 அரைச்சதங்களும் அடங்குகின்றன.

இதுவரையில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற ஜோடியாக மேற்கிந்தியத் தீவுகளின் கோர்டன் கிறீண்டிஜ் மற்றும் டெஸ்மொண்ட் ஹேன்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

97 போட்டிகளில் அவர்கள் இந்த ஓட்ட இலக்கை எட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் மெத்திவ் ஹெய்டன் மற்றும் அடம் கில்கிறிஸ்ட் ஜோடி 104 போட்டிகளிலும் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் திலகரத்ன டில்சான் ஜோடி 105 போட்டிகளிலும் குறித்த இலக்கை எட்டியுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இணைப்பாட்டமாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற ஜோடியாக இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஜோடி உள்ளது.

8 ஆயிரத்து 227 ஓட்டங்களை அவர்கள் பெற்றுள்ளனர்.

ரோஹிட் சர்மாவும் விராட் கோலியும் இன்று ஐயாயிரம் ஓட்டங்களைக் கடந்தால் அந்த இலக்கை எட்டிய 8 ஆவது ஜோடியாக குறித்த பட்டியலில் இடம்பெறுவர்.