முதல் பாதி ஆட்டத்தை தவறவிடுவாரா ஸ்ரயாஸ் ஐயர்

Thursday, 23 March 2023 - 13:53

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் ஸ்ரயாஸ் ஐயர் 2023ம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் முதல் பாதி ஆட்டங்களை தவறவிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரயாஸ் ஐயரின் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் தொடர்ந்தும் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் காவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரிலும் ஸ்ரயாஸ் ஐயர் இடம்பெற்றிருக்கவில்லை.

அவர் குணமடைவதற்கான கால எல்லை இன்னும் குறிப்பிடவில்லை என்ற போதிலும், இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இரண்டாம் பாதியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.