தொடரை வென்றது பங்களாதேஷ்!

Thursday, 23 March 2023 - 18:49

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%21
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை, 2 - 0 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது.

இன்று இடம்பெற்ற மூன்றாவதும், இறுதியுமான போட்டியில், பங்களாதேஷ் அணி, 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 28.1 ஓவர்களில், 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 102 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 13.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி, மழை காரணமாக இடைநடுவே கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.