அமெரிக்காவில் கடும் மழை: 3.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Thursday, 23 March 2023 - 22:41

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%3A+3.5+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிலவும் அதிக மழையால், 3.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு பெய்துவரும் சூறாவளியின் பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளதாகவும், மின் இணைப்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், சான் பிரான்சிஸ்கோ நகரில் மரம் விழுந்ததில், 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

சான்டா பார்பரா கவுன்டியில் பலத்த காற்றால் 26 வீடுகள் சேதமடைந்தன.

இந்தநிலையில், பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தது இரு வாரத்திற்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை தேவைப்படும் என தெரிவிக்க்படுகிறது.

கடந்த 2 நாட்களாக பெய்த கடும் மழையால், வெள்ளம், மணசரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.